கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

0
100

தமிழ்நாடு முழுவதும் ஒரே தினத்தில் 34 ஆயிரத்து 567 பேர் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்றின் மொத்த பாதிப்பு 18 லட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுக்கு ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்சமயம் நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 1580 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே தினத்தில் 27 ஆயிரத்து 26 பேர் இந்த நோய்களில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இதன்மூலமாக மொத்தமாக ஒரு கோடியே பதினைந்து லட்சத்து 54 ஆயிரத்து 259 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல மாவட்ட அளவில் பார்த்தோமானால் சென்னையை தவிர்த்து விட்டு மற்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து 9 மாவட்டங்களில் ஒரு நாளைய பாதிப்பானது ஆயிரத்தை கடந்து பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் வெகு நாட்களுக்குப் பின்னர் நோய் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழே போயிருக்கிறது. அதே வேளையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. மே மாதம் 10 ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோயம்புத்தூரில் 33 ஆயிரத்து 325 பேர் நோய் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள், 1048 பேர் பலியாகி இருக்கிறார்கள், ஆகவே பாதிப்பு நாள்தோறும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்திருக்கிறது.