உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

0
189
Usher! Three arson by the cruelty of vested interest! Great excitement at the Collector's Office!

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவருடைய மனைவி கலா (53). இவர்களது மருமகள் சாந்தகுமாரி (33).இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் சுய தொழில் வெள்ளிப்பட்டறை ஒன்று ஆரம்பித்தனர்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. இத்தொழில் மேம்படுத்த ஒருவரிடம் தவணைக்கு கடன் வாங்கினார். அவ்வாறு வாங்கியது முதல் மாதம் தவறாமல் கடன் கட்டி வந்தனர். சில காலம் இப்படியே கழிந்தது.

திடீரென இவர்கள் மூவரும் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென்று மறைத்து  வைத்திருந்த மண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் மண்ணெய்யை பிடுங்கி அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மூவரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ் விசாரணையில் இதை குறித்து சாந்தகுமாரி கூறியது, எனது கணவர் ரமேஷ் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த ஒருவரிடம் பல தவணைகளில் ரூ. 29 லட்சம் கடன் வாங்கினார்.

அதற்கு ரூ. 50 லட்சம் வரை செலுத்திவிட்டார். ஆனால் பணம் கொடுத்தவர் கந்து வட்டி போட்டு இன்னும் ரூ. 63 லட்சம் தரவேண்டும் என்று கூறினார். பணம் வட்டி போட்டு குட்டி போட்டது போல் கந்து வட்டி  கேட்கிறார்கள். பின்னர் தனது கணவரை தாக்கி விட்டு சென்றனர். இந்த கந்து வட்டி கொடுமையால் மேலும் வெள்ளிப்பட்டறையில் இருந்து பொருட்களை சேதப்படுத்தி விட்டு பட்டறையை மூடி சாவியை எடுத்து சென்று விட்டார்.

எனவே கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம் என்று கூறினார்.இதையடுத்து அவர்களை போலீசார், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும் படி அனுப்பி வைத்தனர். கந்து வட்டி கொடுமையால் மாமனார், மாமியார், மருமகள் ஆகிய 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.