7 நாட்கள் மட்டும் இந்த ஆயிலை பயன்படுத்தினால் நரை முடி கருப்பாக மாறும் அதிசயம்
வீட்டில் உள்ள வயதானவர்கள் பலருக்கு இன்னும் முடி கருமையாக இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுது இருக்கும் இளம் வயதினருக்கே வெள்ளை முடி தோன்றுகிறது. சில வீடுகளில் சிறு வயது குழந்தைகளுக்கே வெள்ளை முடி வர ஆரம்பித்து விடுகிறது.
இவ்வாறு வெள்ளை முடி வந்தாலே இளம் வயதனாலும் முதுமை வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும். இதனால் இவர்கள் கூட இருப்பவர்களே கிண்டலும், கேலியும் செய்வார்கள். அதற்காக கடையில் விற்கும் பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கும். ஆரோக்கியம் பாதிக்காத வகையில் இயற்கையான முறையில் உங்களின் வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றலாம்.அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நரை முடி கருப்பாக மாற எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம் தேவையான அளவு,
மருதாணி இலை 1 கைப்பிடி,
கரிசலாங்கண்ணி இலை,
தேங்காய் எண்ணெய் 200 ml
குறிப்பு: மேற்குறிப்பிட்ட கரிசலாங்கண்ணி இலை கிடைக்கவில்லை என்றால் கடையில் கரிசலாங்கண்ணி பொடி கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளுங்கள்.
செய்முறை:
1. முதலில் கருஞ்சீரகம் அரைத்து கொள்ளுங்கள். பின் மருதாணி இலையையும் அரைத்து கொள்ளுங்கள். பின் கரிசலாங்கண்ணி இலையையும் அரைத்து கொள்ளுங்கள். இவ்வாறு மேற்குறிப்பிட்ட மூன்று பொருட்களையும் தனி தனியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். அதில் 200 ml தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். போதுமான அளவுக்கு எண்ணெய் சூடானதும் குறைவான தீயிலே வையுங்கள்.
3. அதில் அரைத்து வைத்திருக்கும் கருஞ்சீரகம் பொடியை சேருங்கள். பின் கருஞ்சீரகம் சேர்த்த நிலையில் எண்ணெய் கொதித்த பிறகு அரைத்த மருதாணியை சேருங்கள். மருதாணி இலையை சேர்த்த பிறகு எண்ணெய் பொரிந்து காணப்படும்.
4. இந்த எண்ணெய் பொரிந்து முடித்த பிறகு அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இதனை சேர்த்த பிறகு எண்ணெய் கருப்பாக மாறிவிடும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
5. இவ்வாறு தயாரித்த எண்ணெய் சூடு ஆறியதும் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். வடிகட்டிய பிறகு பாத்திரத்தின் கீழ் எண்ணெய் மட்டும் தங்கியிருக்கும். இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்தும் முடியை கருப்பாக மாற்ற கூடிய சக்தி உள்ளது.
6. இந்த எண்ணையை தினமும் காலையில் தடவுங்கள். இல்லை என்னால் காலையில் தடவ முடியாது என்றால் இரவு தூங்குவதற்கு முன் தடவி கொண்டு தூங்குங்கள். காலையில் எழுந்ததும் நீங்கள் எப்பொழுதும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளித்து விடலாம்.
இது போல் தொடர்ந்து 7 நாட்கள் தேய்த்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும். புதிதாக வளர்கின்ற வெள்ளை முடியையும் வளர விடாமல் தடுத்து விடும்.