இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!

0
91
#image_title

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!

கொத்தமல்லி தழை வாடாமல் இருக்க டிப்ஸ்:-

*கொத்தமல்லி தழையை கடையில் இருந்து வாங்கி நல்ல தழைகள் மற்றும் கெட்டுப்போன தழைகள் என பிரித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தலையின் வேர் பகுதியை தண்ணீருக்குள் வைக்கவும்.

கொத்தமல்லியின் தண்டு மற்றும் தழைகள் தண்ணீரில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேர் அதேபோல் வேர் பகுதியில் மண் இருந்தால் அதை நன்கு சுத்தம் செய்து விட்டு டப்பாவில் உள்ள தண்ணீரில்வேர் மட்டும் மூழ்கும் படி போட்டு வைக்க வேண்டும். அதேபோல் இந்த தண்ணீரை 2 நாட்களுக்கு ஒருமுறை மற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தோம் என்றால் கொத்தமல்லி தழை 2 வாரங்களுக்கு கடையில் வாங்கியது போல் புதிதாக இருக்கும்.

*கொத்தமல்லி தழையை பிரஸாக வைத்து இன்னொரு மெத்தட். கடையில் இருந்து வாங்கி வந்த கொத்தமல்லி தழைகளை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து நல்ல கொத்தமல்லி தழைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் வேர் பகுதியை மட்டும் நறுக்கி விட்டு தண்டு மற்றும் கொத்தமல்லி தழைகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இவ்வாறு செய்தோம் என்றால் கொத்தமல்லி தழை சில வாரங்களுக்கு கெடாமல் இருக்கும்.

1 மாதம் வரை பச்சை மிளகாய் பிரஸாக இருக்க டிப்ஸ்:-

*கடை அல்லது மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த பச்சை மிளகாயில் உள்ள காம்பு பகுதியை நீக்கி கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான பாத்திரம் எடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் காம்பு நீக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து மிளகாய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு இந்த மிளகாயை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து ஒரு சுத்தமான காட்டன் தூணியை வைத்து மிளகாயில் ஈரம் இல்லாதவாறு துடைத்துக் கொள்ளவும்.

பிறகு பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்ணாடி டப்பாவில் ஒரு நியூஸ் பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் ஈரமில்லாமல் துடைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டுக் கொள்ளவும். பின்னர் மிளகாய் மேல் ஒரு நியூஸ் பேப்பரை போட்டு மூடி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் பச்சை மிளகாய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.