Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த முறைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டி அடியுங்கள்..!

மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்களும் அதிக அளவில் வந்து விடும். கொசுவால் பல ஆரோக்கிய குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்ட பல முறைகளை செய்து பார்போம். ஆனால், சில வேளைகளில் கொசுக்கள் அவற்றுக்கும் அடங்காது. கொசுக்களை சில எளிய எப்படி விரட்டலாம் என பார்போம்.

ஜன்னல்கள் :

உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மாலை வேளைகளில் மூடி வைப்பது அவசியமாகும்.பகல் நேரங்களை விட மாலை இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகம் சுறுசுறுப்பாக இயங்கும் அதனால், மாலை நேரங்களில் எப்போதும் ஜன்னல்களை மூடியே வைத்திருங்கள்.

செடிகள் :

சில செடிகளுக்கு இயற்கையாகவே கொசு விரட்டும் பண்பு உள்ளது. சாமந்தி, துளசி, சிட்ரோனெல்லா, புதினா, லெமன் கிராஸ், ரோஸ்மேரி, லாவண்டர் போன்ற செடிகள் கொசுக்களுக்கு ஆகாது அதனால், அந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம். அவை கொசுக்களை வீட்டில் வரவிடாமல் தடுக்கும்.

பூண்டு :

தோல் நீக்கிய பூண்டுகளை சாறாக்கி அதனை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அதனை ஆறவைத்து ஸ்பிரே பாட்டிலில் அதனை ஊற்றி வீடு முழுவதும் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.பூண்டு வாசனை கொசுக்களை விரட்டும் பண்பு கொண்டது

எலுமிச்சை – கிராம்பு :

எலுமிச்சை பழத்தை நறுக்கி கொண்டு அதில் கிராம்புகளை சொருகி வைத்து கொள்ளுங்கள். இதனை வாசனை கொசுக்களுக்கு ஒவ்வாது. அதே போல கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகிறது.

Exit mobile version