Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராணுவத்தையும் விட்டுவைக்காத திமுக! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில், இந்திய வரைபடத்தின் பாகங்கள் அனைத்தும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான், மற்றும் சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒரு நிறத்திலும் வெளிப்படையாக காட்டப்பட்டு இருக்கின்றது, என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

உதயநிதி வெளியிட்டிருக்கும் அந்த காணொளியானது நாட்டுடைய ஒருமைப்பாட்டையும், மாண்பையும், இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டிருப்பது ,தேசத்துரோக செயலாகும்.

காஷ்மீரில் அனுதினமும் பாடுபட்டு நம்முடைய நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் ஆன நம் சகோதரர்களையும், காஷ்மீருக்காக உயிர் தியாகம் செய்த அமரர்களின் புகழையும், திமுக வெளிப்படையாகவே இந்த காணொளி மூலமாக அவமானம் செய்திருக்கிறது.

இந்த செயலின் மூலமாக. உள்ளூர் அரசியல் கூட தெரியாத உதயநிதிஸ்டாலின் சுதந்திரம் அடைந்ததிலிருந்து முக்கியமான விஷயங்களை மிகவும் தவறாக கற்பனை செய்து சிக்கிக் கொள்வது திமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை.

Exit mobile version