Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளிகளை மூட பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு

Uttar Pradesh Government Anounced Leave to School

Uttar Pradesh Government Anounced Leave to School

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளிகளை மூட பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்த வகையில் சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது.இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டதால் அதை மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதாக நினைத்த அரசு ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.இதனால் இது கொரோனா பரவலின் இரண்டாம் அலையா என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை முன்னிட்டு 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி கூடங்களும் நாளை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில்,அம்மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடும்படி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.  அந்தவகையில் ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கிற்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.  இதுவரை கொரோனா பாதிப்பால் 3,036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பாதிப்படைந்து  5.95 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  கொரோனா பாதிப்பால் 8,759 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.  இதில், 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் நாளை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று அறிவித்துள்ளார்

இதுமட்டுமல்லாமல், தேர்வுகள் நடைபெறாத பிற அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பையும் அம்மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

Exit mobile version