Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே இன்று மாலை தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பார் என்று சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

மேலும் உத்தவ் தாக்கரே முதல்வராகவும் ஆதித்ய தாக்கரே கல்வி அமைச்சராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் முக்கிய அமைச்சர்களாக பொறுப்பை ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன

புதிதாக பதவி ஏற்க இருக்கும் சிவசேனா கட்சி அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை தந்தால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே அடுத்த தேர்தலில் தனிப்பெரும் மெஜாரிட்டியை பெற்றுவிடும் என்றும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே வரும் 5 ஆண்டுகளில் தங்கள் கட்சி செய்ய உள்ள முக்கிய கடமை என்றும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்

எனவே மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சிகள் சிவசேனாவை வளர்த்து விட ஒரு வாய்ப்பை கொடுத்திருப்பதாகவும் சிவசேனா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளும் இனி அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version