நியாய விலை கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள்!! எப்போதுதான் நிரப்பப்படும்.. அமைச்சர் சொன்ன பதில்!!

0
95
Vacancies in Fair Price Shops!! It will be filled anytime.. Minister's answer!!

புத்தாண்டை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு வருகிற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் நோக்கில் கூட்டுறவு துறை சார்பில் சிறப்பு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. அவற்றை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனும் சிறப்பங்காடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் துவங்கி வைத்தார்.

அப்போது அவர் தீபாவளி பண்டிகையின் பொழுது கூட்டுறவு துறையில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் வரவேற்பு குறித்தும் பொங்கல் பண்டிகை சிறப்பு தொகுப்புகளின் அமைப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

தீபாவளி பண்டிகையின் போது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பட்டாசுகள் குறித்து அவர் பேசியிருப்பதாவது :-

தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அதிரசம், முறுக்கு போன்ற பொருள்கள் செய்ய விற்பனை தொகுப்புகள் வைக்கப்பட்டன எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக கூட்டுறவுத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்ட பட்டாசுகளை பொறுத்த வரை 21 கோடி வரை விற்பனையாகி உள்ளன இன்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் வருகிற பொங்கல் பண்டிகையொட்டி அறிமுகப்படுத்தி இருக்கும் சிறப்பு தொகுப்புகள் குறித்து தெரிவித்த தகவல்கள் ஆவது :-

பொங்கல் தொகுப்பில் பனை வெல்லம் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், சர்க்கரைப் பொங்கலை பொறுத்தவரையில் அதில் பனைவெல்லம் பயன்படுத்தக்கூடாது என்று பதில் அளித்திருக்கிறார். மேலும் மூன்று வகையான சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நியாய விலை கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்து இருக்கும் பதிலாவது :-

நியாய விலைக் கடைகளில் 3,440 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி நியமன ஆணை வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.