வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா??

0
164
#image_title

வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா??

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் பவார் விலகியுள்ளதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் சரத் பவார் அவர்களின் வாரிசு தான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து அந்த கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத் பவார் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இனிமேல் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இதையடுத்து வெற்றிடமாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு யாரு அடுத்து தலைவராக வருவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து அவரது வாரிசுதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் என்று கூறப்படுகின்றது.

தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் சரத் பவார் அவர்களின் மகள் சுப்ரியா சுலே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

சரத் பவார் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து இராகுல் காந்தி அவர்கள் எம்பி சுப்ரியா சுலேவுடன் அலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து அவர்தான் அடுத்த தலைவர் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது. இதனால் இன்னொரு வாரிசு அரசியல் உருவாகப் போகின்றது என்று கருத்துக்கள் பரவி வருகின்றது.