Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெக்கேஷன் மோட் ஆஃப் ஆனது!தனி விமானத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

சில நாட்களுக்கு முன்பு கோவா சென்றிருந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலித்து கொண்டிருக்கின்றனர்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.மேலும் லிவ்விங் டுகெதர் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் பல்வேறு கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானம் மூலம் இருவரும் சென்றனர்.இதையடுத்து இருவரும் வெக்கேஷன்காக கோவாசென்றனர்.அங்கு உள்ள ரிசார்ட் ஒன்றில் அவர் தங்கியிருந்த புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டும் இருந்தனர்.

அதன்பிறகு நயன்தாராவின் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அவர்கள் கோவா வெக்கேஷன் ஆப் செய்துவிட்டு சென்னைக்கு தனி விமானத்தின் மூலம் வந்துள்ளனர் என்ற செய்தி கிடைத்துள்ளது.

Exit mobile version