Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பூசி செலுத்தியும் கொரோனா! நடிகைக்கு நேர்ந்த சோகம்!

Vaccinated celebrity affected by corona

Vaccinated celebrity affected by corona

தடுப்பூசி செலுத்தியும் கொரோனா! நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துள்ளுவதோ இளமை.இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஷெரீன்.இவர் இந்தப் படத்தில் தான் தமிழில் அறிமுகம் ஆனார்.மேலும் இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.ஷெரீன் தமிழ்,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் பங்கேற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.கடந்த சில வருடங்களாகவே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவதில்லை.அதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை மறந்தே விட்டனர்.மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் வலம் வருபவர் ஆவார்.இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார்.

இவர் சமீபத்தில் கொரோனாத் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டார்.மேலும் அதிலிருந்து மீண்டும் வந்து விட்டார்.இதனிடையே ஷெரீன் தற்போது மீண்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்த செய்தியை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.தற்போது லேசான பாதிப்பு தனக்கு உள்ளதாகவும் விரைவில் நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை ஷெரீன் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இருப்பினும் அவர் நோயிலிருந்து மீண்டு விடுவார் என்று அவரே கூறியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் நடிகை ஷெரீன்.

Exit mobile version