இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆனது மிகமிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊசியை போட்டுக்கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஏன் அரசியல்வாதிகள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பு அம்சம் மிகுந்தது ஆகவே நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஆகவே அடுத்ததாக இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும் பொழுது ஒரு சில முக்கிய அரசியல்வாதிகளும் அந்த தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று தெரிகிறது .அதில் சில மத்திய அமைச்சர்களும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி முதல் கட்டமாக ராணுவத்தை சார்ந்தவர்கள், காவல் துறையைச் சார்ந்தவர்கள் ,மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், போன்றவர்களுக்கு இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த முறை இந்த ஊசி போட்டுக் கொள்ளும் முக்கிய நபர்களில் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நரேந்திர மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் போன்றவர்களும் அடங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல மாநிலத்தில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்கள் அதாவது முதலமைச்சர்கள் ,ஆளுநர்கள்,மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இந்த தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.
சமீபத்தில் தெலுங்கானாவில் இந்த ஊசியைப் போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் ஒருவர் நெஞ்சுவலி வந்து உயிரிழந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் மருத்துவ பரிசோதனையில் அவர் உயிர் இழந்ததற்கு , இந்த ஊசிக்கும், எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும்கூட மக்களிடையே இந்த மருந்து தொடர்பாக அச்சம் ஏற்பட்டது. அதனை தவிர்ப்பதற்காகவே அடுத்த கட்டமாக அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும். இந்த ஊசியை செலுத்தி கொள்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.