தமிழக அரசு சார்பாக நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரையில் மாநில அளவில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கடுமையான மழை இருந்த போதிலும் 12 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள், இதுவரையில் 77.2% நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 41.60% நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. ஆகவே அவர்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
15 மாவட்டங்களுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி 80 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது, மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு உள்ளது. மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கிறது என கூறி இருக்கிறார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற 12ஆவது மகா தடுப்பூசி முகாமிற்கு பின் நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மேலும் இனி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது 4 ஆயிரத்து 527 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 573 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.