Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி? காரணம் என்ன?

கொரோனா என்ற கொடிய வைரஸ் மனித இனத்துக்கே தீங்கை விளைவித்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி  குறித்த 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர் எங்கு இருக்கிறார், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
Exit mobile version