Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்!

Vaccine coming from the place where the corona originated! Permitted by the World Health Organization!

Vaccine coming from the place where the corona originated! Permitted by the World Health Organization!

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக கொரோனா நோய் தொற்றின் மூலம் 4 இலட்சம் பேர் தினசரி பாதிக்கப்படுகிறார்கள்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்திற்காக பல நாடுகள் பல தடுப்பூசி தயாரிப்புகளை தொடர்ந்து சோதனை செய்து தற்காலிகமாக, அவசர தேவைக்கு மாற்று மருந்தாக உபயோகிக்க சில மருந்துகளை தயாரித்து உள்ளது.

இந்நிலையில் போர் கால நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்த தடுப்பூசிகளை அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நாம் என்னதான் அனுமதித்தாலும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிசோதனை இன்றி எந்த மருந்தையும் உட்கொள்வதில்லை.

இதே போல் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் உலக சுகாதார நிறுவனமான யுனிசெப்-ன் அனுமதி பெற்ற பிறகே தடுப்பூசிகளை மக்கள் உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது.இதே போல் சீனாவின் சைனோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அதன் ஆய்வு தொடர்பான காரணங்களால் நீண்ட நாட்களாக அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.அதன் காரணமாக பல நாடுகளும் அந்த மருந்தை பயன்படுத்த தயக்கம் காட்டி வந்தன.

தற்போது சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசர கால அடிப்படையில் நேற்று அனுமதி அளித்துள்ளது.சீனாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.அதே போல்  உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி பெற்ற 6 ஆவது தடுப்பூசி இது ஆகும்.

யுனிசெப் நிறுவனம் இந்த தடுப்பூசியை பற்றி தெரிவிக்கையில் 79 சதவிகிதம் செயல்திறன் இருக்கும் என்று கூறியுள்ளது.மற்ற தடுப்பூசிகளை போல் இதையும் 3 முதல் 4 வார இடைவெளியில் இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Exit mobile version