Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சங்கரா… வேணாம் சாமி – வடிவேலு ஓபன் டாக்!

இனி சங்கர் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டெனென்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை சாதாரணமாக ஆக்கிவிட்டது.

அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது என தெரிவித்தார். தொடர்ந்து எனக்கு எண்டு கார்டே இல்லை என நகைச்சுவையாக தெரிவித்த அவர் நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கண்ணி வெடி வச்சாங்க என தனது பாணியில் தெரிவித்து சிரிப்பலையை உருவாக்கினார்.

தொடர்ந்து நான்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண், சபாஷ் கரணாக மாறிவிட்டார் என்றும் , இந்த நேரத்தில் கடவுள்,மக்கள், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இயக்குனர் சங்கர் தரப்பு தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளை பொய் என தெரிவித்து, இனிமேல் சங்கர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் நடிக்க மாட்டேன் என்றும் சங்கர் பக்கமே இனி தலை வைத்து படுக்கமாட்டேன் என்றும் ஓபானாக தெரிவித்தார்.

Exit mobile version