Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் நடித்து காட்டியது போலவே நடக்கிறதே! நடிகர் வடிவேலு!

மனிதர்களின் வாழ்க்கையில் நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதனை திரைப்படங்களில் நகைச்சுவை ஆக்கி நடித்துக் காட்டிய நடிகர் வடிவேலு நோய் தொற்று வராமல் இருக்க ஊரடங்கு தொடர்பாக நேற்றைய தினம் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் நோய் தொற்றினால் பீதி ஏற்பட்டு இருக்கிறது, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, யாரையும் சந்திக்கக்கூடாது, கை கொடுக்க கூடாது என்று தெரிவிக்கிறார்கள். மருத்துவ உலகையும், மனித உலகையும், மிரட்டி வருகின்றது. இந்த நோய்த்தொற்று இதே போல யாருமே இதுவரையில் பார்த்தது இல்லை என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இப்போது நடிக்க வருவதற்கு மற்றும் படம் எடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை, படம் பார்ப்பதற்கு வருவதற்கும் யாரும் கிடையாது, பின் நான் எப்படி தனியாக போய் நடிப்பது இறைவன். கொரோனா என்ற ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால் தான் எல்லோரும் வெளியே வர இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் வேலை இல்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று சவால்விட்டு நடித்து இருந்தேன். அதனை வெறும் படமாக தான் பார்த்தேன் ஆனால் உண்மையிலேயே எல்லோருக்கும் வேலை இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்திருக்கிறான் இறைவன். பயம் தேவையில்லை நோய்த்தொற்றை எல்லோரும் சேர்ந்து அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் வடிவேல்.

Exit mobile version