VAIKO:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னணி அரசியல் வாதிகளில் ஒருவர் திரு வைகோ. திமுக கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு விலகிய இவர் மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி மிகப் பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற வில்லை, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வருகிறார்.
திரு வைகோ அவர்கள் கடந்த மே மாதம் நெல்லையில் உள்ள சகோதரர் வீட்டில் இருந்த போது கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து தோள்பட்டையில் பிளேட் வைக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ மகன் துரை வைகோ, தனது அப்பாவுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார்கள். சிறிது கால ஓய்வுக்கு பிறகு பூரண குணம் அடைவார் என்று கூறியிருந்தார். எனவே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் அவருக்கு அறுவை சிகிச்சையில் தோள்பட்டையில் விக்கப்பட்ட பிளேட் அகற்றுவதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது . மதிமுக போதுச்செயலாளர் வைகோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் செய்தியை கேட்டு தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார். மேலும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிராத்தனை செய்து வருகிறார்கள்.