ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வந்த ஆபத்து மத்திய! மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்!

0
103

சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது எனவும், இந்தியாவின் வரலாற்று நலனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அதற்கு ஆபத்து வந்துவிடும் என்று வைகோ எச்சரிக்கை செய்திருக்கிறார்.அதாவது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய கடவுள் வழியில் இலங்கையின் தென்பகுதியில் முக்கியமான ஒரு பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது.

சூயஸ் கால்வாய் அருகில் மலாக்கா நீரிணை அருகில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் 36 ஆயிரம் கப்பல்களை கையாளும் வசதி உடையதாக இருக்கிறது. இதில் நான்காயிரத்து 500 என்னை கப்பல்களும் இருக்கிறது .இந்தத் துறைமுகம் அந்தப் பகுதியில் செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைவாக கொடுக்கும். இதன் காரணமாக, எரிபொருள் தேவையும் கணிசமாக குறையும் என்று தெரிவித்து இருக்கிறார் வைகோ.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி சீன நாட்டிற்கு வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. சீன நாட்டின் கனவுத் திட்டமாக இருக்கும் சீனாவிற்கும், ஐரோப்பாவிற்கும், இடையில் இருக்கின்ற சாலைகளையும், துறைமுகங்களையும், ஒன்றிணைக்கும் விதத்தில் புதிய பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை ஏற்படுத்தும் முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது. என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய பெருங்கடலில் அமையப்பெற்றிருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கு முக்கிய துறைமுகமாக அமையும் என்ற காரணத்தால், இதன்மூலமாக சீனாவின் ராணுவத் தளமாக இந்த பகுதி மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் கடற்படை தளம் உருவாகும் ஆனால் அது இந்தியாவின் நலனுக்கு எதிராக நிற்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதை இந்திய அரசு நினைவு கூற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தமிழீழத்தில் தமிழ் மக்களே கொன்று குவிப்பதற்கு இலங்கை அரசிற்கு உறுதுணையாக இருந்த சீனா தமிழ்நாட்டிற்கு மிக அருகில் இருக்கின்ற கடற் பகுதியை கைப்பற்றி கொள்வதும் அங்கு நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒருவேளை சீனா அரசு அந்தப் பகுதியில் ராணுவத் துருப்புகளை நிறுத்தினால் அது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும் சீனா இந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கிறது. இப்போது இலங்கை வழியாக இந்தியாவை நெருங்கி வந்து இருக்கிறது. ஆகவே அந்த நாட்டின் மனதில் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.அதனை மத்திய அரசும், மாநில அரசும், கண்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இலங்கையின் இந்த செயலுக்கு நிச்சயம் இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதே அநேக மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. அதோடு இலங்கையிடம் நட்பு பாராட்டுவதும் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.