Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

முன்னாள் பிரதமரும் மூத்த தலைவராக இருந்த மறைந்த அட்டல் பிகாரிவாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நினைவிடம் அமைந்திருக்கும் டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

இந்நிலையில், அட்டல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களான அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும் அவரது நண்பருமான அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக கட்சியினரும் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.

Exit mobile version