Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!

ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்து! காயத்துடன் உயிர்பிழைத்த பணியாளர்கள்!!

 

உத்திரமேரூர் அருகே வேன் ஒன்று ஏரியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த பணியாளர்கள் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பித்துள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியை அடுத்த சீத்தனக்காவூர் என்ற பகுதியில் இருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7 மணியளவில் கிளம்பியது.

 

படைப்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இந்த வேன் செல்லும் பொழுது உத்திரமேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் பொற்பந்தல் என்னும் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர், ஐந்து பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

 

காயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் உள்பட 11 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது வேன் ஓட்டுநர் சிவானந்தம் மற்றும் வேனில் பயணித்த பணியாளர்கள் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் ஜெயவேல் மற்றும் சாலவாக்கம் உதவி ஆய்வாளர் கிஷோர் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version