சட்டசபை கட்சித்தலைவர் பதவி! சீனியர்களை ஓரம் கட்டிய எல்.முருகன்!

0
138

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு சுமார் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக சட்டசபையில் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன்.இவ்வாறான சூழ்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை கட்சியின் தலைவராக திருநெல்வேலி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மே மாதம் ஒன்பதாம் தேதி யான நேற்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமான கமலாலயத்தில் சபை உறுப்பினர்களின் கூட்டம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பொறுப்பாளரான மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் ctரவி மற்றும் சுதாகர் ரெட்டி அதோடு பாஜகவின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களான காந்தி, வானதி சீனிவாசன், நாகேந்திரன், சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இப்படியான சூழ்நிலையில், நயினார் நாகேந்திரன் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த கட்சியில் மிகப்பெரிய புயல் வீசிக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சட்டசபை உறுப்பினர்களில் மிக மூத்த தலைவர் என்றால் அது எம்.ஆர்.காந்திதான் கட்சியில் மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் அவர் தான் சீனியர் என்று சொல்லப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் சுரேஷ் ராஜனை தோற்கடித்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் காந்தி. அவரை அடுத்து மூத்த தலைவர் என்று சொன்னால் வானதி ஸ்ரீனிவாசன் தான். தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் அவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டு அதிமுகவில் இருந்து வருகை தந்த நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு சட்டசபை கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற தாராபுரம் சட்டடபை தொகுதியில் பா.ஜ.கவின் மாநில தலைவர் முருகன் சென்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் திமுகவின் வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் இடம் அவர் தோல்வியைத் தழுவினார்.

பிரதமர் நரேந்திரமோடியை தாராபுரம் வந்து முருகனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது மிகப்பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டினார் முருகன். தமிழகத்தில் ஒரு பாஜக வேட்பாளர் இதுவரை செய்யாத அளவிற்கு செலவு செய்து பார்த்தார். பல மத்திய அமைச்சர்கள் வந்து அவருக்காகப் பிரச்சாரம் செய்தார்கள். இருந்தாலும் தன்னுடைய தோல்விக்கு வானதி சீனிவாசனுக்கும் பங்கு இருக்கிறது என்று நினைக்கிறார் முருகன்.

திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ருத்ரகுமாரன் வானதியின் தீவிர ஆதரவாளர் அவர் மட்டும் இல்லை இன்னும் பல நிர்வாகிகள் வானதியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் சரியாகப் பணியாற்றவில்லை எனவும் முருகன் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் பாஜகவின் அவரது ஆதிக்கம் அதிகமாகி விடும் என்ற காரணத்தால், தான் சீனியர்கள் ஒன்று சேர்ந்து தன்னை தோற்கடித்து விட்டதாகவும் அவருக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் சட்டசபை கட்சித் தலைவராக வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்காமல் நயினார் தேர்ந்தெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். அதேநேரம் காந்தி மூத்த தலைவராக இருந்தாலும் அவருக்கு 75 வயதிற்கு மேல் ஆகிவிட்டபடியால் அவருக்கு பொறுப்பும் வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
மீதம் உள்ளவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் சரஸ்வதியும் தான் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து வந்தவர், சரஸ்வதி திமுகவில் இருந்து வந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இவருக்கு முன்னரே நயினார் நாகேந்திரன் மாநில நிர்வாகிகள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தனது முக்கிய பதவி வழங்கப்படாததால் வருத்தத்தில் இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் அதோடு அவர் செல்லப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது ஆகவே இல்லை என்று அவரை வீடுதேடி சந்தித்து சமாதான படுத்தினார். அதனடிப்படையில் நயினார் நாகேந்திரன் முக்கியமான பதவியை கொடுத்திருக்கிறார் முருகன்