Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

#image_title

வந்தே பாரத்தின் கட்டணத்தை தான் குறைக்க வேண்டுமே தவிர மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தைதான் குறைக்க வேண்டும். மற்ற ரயில்களின் வேகத்தை குறைக்க கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் 75 நகரங்களை இணைக்கும் வகையிலும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை முதல் மைசூரு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக சென்னை முதல் கோவை வரையிலும் சமீபத்தில் சென்னை முதல் நெல்லை வரையிலும் தொடங்கப்பட்டது. அண்மையில் சென்னை முதல் நெல்லை வரை தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதையடுத்து வந்தே பாரத் ரயிலுக்காக வழக்கமாக இயங்கி வரும் பொதிகை, பாண்டியன், வைகை போன்ற அதிவிரைவு ரயில்களின் நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தை தானே தவிர ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயணம் செய்யும் மற்ற ரயில்களின் வேகத்தையோ அல்லது நேரத்தையோ அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர்.

குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version