Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!?

#image_title

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!?

சென்னை முதல் நெல்லை மாவட்டம் வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத் இரயிலின் டிக்கெட் விலை குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தற்பொழுது முக்கியமான நகரங்களுக்கு இந்தியாவில் உள்ள வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வந்தே பாரத் இரயில் தொடங்கிய முதல் சில நாட்களில் மக்களிடையே வந்தே பார்த் இரயிலுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வந்தே பாரத் இரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதையடுத்து சமீபத்தில் சென்னை முதல் நெல்லை மாவட்டம் வரை வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் அதற்கான வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத் இரயிலின் டிக்கெட் விலை குறித்த தகவலை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படும் வந்தே பாரத் இரயிலில் இரண்டு வகையான கட்டணங்களை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சேர் கார் கட்டணம் என்று இரண்டு வகையான கட்டணங்களை அறிவித்துள்ளது.

அதன்படி உணவுக் கட்டணம், ஜிஎஸ்டி முன்பதிவு கட்டணம் ஆகியவை சேர்த்து ஏசி சொகுசு வகுப்பிற்கு 3025 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேர் கார் வகுப்பிற்கு உணவுக் கட்டணம், ஜிஎஸ்டி முன்பதிவு கட்டணம் ஆகியவை சேர்த்து 1620 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version