Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் இணையும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஜோடி..!! குஷியில் ஜோவிகா..!!

Big Boss Vanitha

Big Boss Vanitha: அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையில் சிக்கி கொள்பவர் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் அதிக அளவில் படங்களில் பார்க்க முடியவில்லை.

கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார் வனிதா விஜயகுமார். அதன்பிறகு இருவருக்கும் விவாகரத்து ஆனது . அதன் பிறகு வனிதா விஜயகுமார் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் 2005-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு நடன கலைஞரான ராபர்ட் மாஸ்டருடன் (Robert Master) இவர் ஒன்றாக வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பிறகு வனிதா விஜயகுமார் 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது.

இப்படி சர்ச்சையில் வாழ்ந்து வரும் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பெரும் அளவு பிரபலமானார். ஆரம்பத்தில் இவரை வெறுத்த ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல அவரின் தைரியத்தை கண்டு பாராட்டினார்கள். ஒரு சிலர் இவரை வத்திக்குச்சி வனிதா என்றும் வசை பாடினார்கள். அதன் பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருந்திருந்தாலும் வெளியில் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். அதன்படி முன்னதாக ராபர்ட் மாஸ்டருடன் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல் என்ற படத்தில் வனிதா ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது மீண்டும் இருவரும் மிஸ்டர் & மிஸஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் ஒன்றாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை நடிகை வனிதா விஜயகுமாரி நண்பர் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஷகீலா பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், வனிதாவின் மகள் ஜோவிகா இந்த படத்தில் தயாரிப்பு பணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: Bigg boss Archana: ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவின் காதலர் இவரா?

Exit mobile version