Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேரூராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் உறுப்பினர் ரகளை! காவல் நிலையத்தில் புகார்

பேரூராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் உறுப்பினர் ரகளை! காவல் நிலையத்தில் புகார்

பேரூராட்சி கூட்டத்தில் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகத்தை சேதப்படுத்திய அதிமுக பேரூராட்சி உறுப்பினர்

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகத்தை சேதப்படுத்திய அதிமுக பேரூராட்சி உறுப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் நேற்று கூட்டம் நடைபெற்றுது இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 2வது வார்டு அதிமுக உறுப்பினர் பரிமளா அவருடைய கணவர் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடு நடப்பதாக வெளியில் இருந்து சத்தம் போட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளியில் இருப்பவர் சத்தம் போடுகிறார் அவரை வெளியேற்றும் படி கூறியதால் அதிமுக பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் திமுக பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென அதிமுக 1வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் சரவணன் என்பவர் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகங்களை எடுத்து வீசி உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அதிமுக 1வது வார்டு உறுப்பினர் சரவணன் என்பவர் கூட்ட அரங்கில் இருந்த தீர்மான புத்தகம் மற்றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியதாக உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version