பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதில் ஒரு பகுதியாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளது.
ஆனால் இந்த முறை பிராமணர்கள் ஒன்று கூடி தி.க.வினரைப் பார்த்து அறைகூவல் விடுத்துள்ளனர், அதன் காரணமாவது என்னவென்றால்! இத்தனை வருடங்களாக பூணூல் என்பது பிராமணர்கள் அணியும் ஒரு விடயம் என்றே நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பூணூல் என்பது பிராமணர்களுக்கானது மட்டுமல்ல, சத்ரியர்களுடைய பாரம்பரிய வழக்கம் என்று கூறி தமிழ்நாட்டின் சத்ரியர்களான வன்னிய குல சத்ரியர்களும் தற்போது அணிந்து வருகின்றனர்.
ஆம், வியப்பான விடயம் தான். இதுபற்றி வன்னியகுல சத்ரிய அமைப்புகளிடம் கேட்ட போது அவர்கள் கூறிய விசயமானது, பூணூல் என்பது ஒவ்வொரு சத்ரியனும் குருகுலக் கல்விக்கு செல்லும் போது தனது குருவால் அணிவிக்கப்பெறும் நூல் தான் பூணூல். இது ஒவ்வொரு சத்ரியனும் தனக்கான கடமைகளை நினைவுபடுத்திக்கொள்ள அடையாளமாக அணிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் சத்ரியர்களான நாங்கள் மன்னராட்சி காலம் தொட்டு, ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை பூணூல் அணிந்திருந்தோம், ஆனால் சுதந்திரத்திற்குப் பின் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின் நிலங்களை இழந்து உழுகுடிகளாக மாறிப்போனதால் இந்த பூணூல் அணியும் பாரம்பரியத்தை கைவிட்டுவிட்டோம். ஆகையால் இழந்துவிட்ட எங்கள் பாரம்பரியத்தை மீட்கும் விதமாக மீண்டும் பூணூல் அணியும் பழக்கத்தை கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து விழாவாக நடத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த பூணூல் விழா இந்த வருடம் சிதம்பரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தொண்டி, மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஆறு இடங்களில் நடந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று ஆவணி அவிட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இதனாலேயே பிராமணர்கள், தங்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் தி.க.வினரிடமிருந்து தங்களைக் காக்க சத்ரியர்களான வன்னியகுல சத்ரியர்கள் வருவார்கள், முடிந்தால் அவர்களின் பூணூலை அறுத்துப்பாருங்கள் என்று அறைகூவல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு ஏற்ப இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் இந்த வருடம் திராவிடர் கழகம் போன்ற பெரியாரிய இயக்கங்கள் பூணூல் அறுக்கும் நிகழ்வுகளில் எதுவும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிய குல ஷத்ரியர்கள் பூணூல் அணியும் விழா,வன்னியர்கள் பூணூல் அணியும் விழா,
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.