Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வன்னியர் அக்னி கலசம் இடிப்பு..செஞ்சி அருகே பதற்றம்.!!

செஞ்சி அருகே வன்னியர் சங்க அக்னி கலச மேடையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக கட்சி சார்பில் சிமெண்டால் செய்யப்பட்ட அக்னி கலசம் மற்றும் சிங்க உருவச்சிலைகள் அமைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் இவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நேற்று காலை தையூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் தையூர் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தையூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேடையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Exit mobile version