சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று மிகப் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பல சிக்கல்களை சந்தித்தது அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
அந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.அதனடிப்படையில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்ட முன்வரைவை சட்டசபையில் நிறைவேற்றிய ஆணையிட்டார்.
இதனை பல தனி நபர்கள் எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தார்கள் சுமார் 25க்கும் அதிகமான வழக்கு இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்குகளை நேற்றையதினம் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து மனுக்கள் மீதான அதிலும் ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இல்லை எதிர் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வன்னியர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி இதுதொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தமிழக அரசு உள்ளிட்டவர்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு தேதியை இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் வழக்கின் இறுதி விசாரணை தயாராக இருப்பதன் காரணமாக, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது
.அதோடு இந்த 10 .5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனம் உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் மறுவிசாரணை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்கள்.