Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பயங்கர ட்ரெண்டிங் ஆன வரலட்சுமி சரத்குமார் வீட்டு விசேஷம்!!

Varalakshmi Sarathkumar Home Special!!

Varalakshmi Sarathkumar Home Special!!

முதலில் வில்லனாகவும், பின்னர் ஹீரோவாக கலக்கியவரும், தமிழ் ரசிகர்களால் ஆசையாக சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவரும் தான் சரத்குமார். ஏராளமான ஹிட் திரைப்படங்களை நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னாள் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கத் தலைவர் ஆவார். ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்னும் அரசியல் கட்சியினைத் தொடங்கி நடத்தி வந்தார். தற்போது ‘பாரதிய ஜனதா கட்சியுடன்’ தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றன. முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவதாக நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார்.

வரலட்சுமி அவர்கள் தன் தந்தையை போல் தனக்கும் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறிய போது சரத்குமார் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவருக்கு ‘பாய்ஸ்’,’ சுப்ரமணியபுரம் ‘ போன்ற திரைப்பட வாய்ப்புகள் கை நழுவியது. பின்னர் சரத்குமார் ஒத்துழைத்த நிலையில் அப்போது அறிமுகம் இயக்குனரான விக்னேஷ் சிவனின் ‘போடா போடி’ படத்தில் நடித்தார். அந்த படம் நல்லா ஓடவிட்டாலும் அவருக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அதன் பின் தொடர்ச்சியாக நடித்து வர, பிரபல இயக்குனரான பாலாவின் படமான “தாரை தப்பட்டை” என்ற படத்தில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து தெலுங்கு மொழியிலும் நடிக்க ஆரம்பித்தார்.

வரலட்சுமி திருமணம்: மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ‘நிக்கோலாய் சச்தேவ்’ என்பவரைக் காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருவின் காதலுக்கு சரத்குமார் ஒப்புதல் அளித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.

திருமணமானப் பின் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சமூக வலைதளங்களில் வரலட்சுமி தனது ரசிகர்களுடன் கனெக்ட்வில் இருப்பார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பயங்கர டிரண்ட்ராகியுள்ளது. அதில் வரலட்சுமி தனது வீட்டை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விளக்குகளால் அலங்கரித்துள்ளார். அந்த வீடியோவின் கேப்ஷனாக ‘சந்தோஷங்களை கொட்டித் தீர்க்க வேண்டிய தருணம் இது’ என்று மென்ஷன் செய்துள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது

Exit mobile version