Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மறுபிறவி எடுத்து வந்த வாரணம் ஆயிரம் கதாநாயகி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

Varanam Aayiram is the heroine who took rebirth! Fans flooded with joy!

Varanam Aayiram is the heroine who took rebirth! Fans flooded with joy!

மறுபிறவி எடுத்து வந்த வாரணம் ஆயிரம் கதாநாயகி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.அந்தவகையில் நாட்டில் படுக்கைகள் இன்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பெருமளவு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த சூழலில் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றிப் அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும்.

அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கலக்கும் பெண்களின் சாக்லெட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன் வீட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு பிரபல பாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.அதன்பின் அவர் கொரோனா தொற்று குணமாகி மால்தீவிற்கு தனது காதலனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தற்போது அல்லு அர்ஜுனுக்கும் கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் தங்களின் வீட்டினுள்ளே தனிமனை படுத்திக்கொண்டு வருகின்றனர்.

அதுபோல வாரணம் ஆயிரம்,வெடி போன்ற முன்னணி கதாநாயகன்-களுடன் ஜோடியாக நடித்த சமீரா ரெட்டிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இவரும் தன்னை வீட்டினுள்ளே தனிமை படுத்திக்கொண்டார்.அதற்கடுத்து கொரோனா சிகிச்சைகளையும் எடுத்துக்கொண்டார்.தற்போது தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வெளிவந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி முறையான உணவு பழக்கம்,உடற்பயிற்சி,நல்ல தூக்கம் என அனைவரும் இந்த கொரோனா கால நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version