பீர் விலையில் பல்வேறு குளறுபடிகள்! நிறுவனங்களுக்கு கோடிகளில் விதித்த அபராதம்!
பீர் விலையை நிர்ணயம் செய்யும் முறைகேடு நடந்துள்ளது. அந்த வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பீர் மதுபான விலையை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இந்திய வணிக போட்டி ஆணையம் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இதில் பணி போன்ற நிறுவனங்கள் விதிகளை மீறி விலை ஒருங்கிணைப்பில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நியாயமற்ற வணிக நடைமுறையில் ஈடுபட்டதாக 2017 ம் ஆண்டு புகார் தெரிவித்ததன் காரணமாக முறைகேடுகளை தாமாக விசாரிக்க முன்வந்தது
மேலும் இது குறித்த விசாரணையை 2009 முதல் 2018 வரை நடந்த முறைகேடுகள் வரை விசாரிக்க முடிவு செய்து அறிவித்தது. சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரித்த இந்திய வணிகப் போட்டி ஆணையம் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இந்த வணிகப் போட்டி ஆணையத்தில் 231 பக்க உத்தரவில் யுனைடெட் ப்ரூவரீஸ் 752 கோடியும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனத்திற்கு 120 கோடியும் அபராதம் விதித்துள்ளது.
அனைத்திந்திய பீர் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தின் துணையுடன் இந்த முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் இந்த அமைப்புக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுபான விலை நிர்ணயம் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் பல நிறுவனங்கள் இந்த அபராத நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் புதுச்சேரியில் பீர் விலை நிர்ணய மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.