Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் இத்தனை நாள் இருக்கா?… பீதியைக் கிளப்பும் படக்குழு!

வாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் இத்தனை நாள் இருக்கா?… பீதியைக் கிளப்பும் படக்குழு!

வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.

விஜய்யின் நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக அமைந்துள்ளது. இப்போது வாரிசு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஷூட்டிங் நடக்க வேண்டியுள்ளதாம்.

அதிலும் விஜய் பிரகாஷ் ராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் 20 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எதிர்பார்த்தபடி வாரிசு திரைப்படம் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் வாரிசு படத்தை தெலுங்கில் தமிழில் ரிலீஸ் செய்யும் அதே நாளில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் பிரபாஸ் ஆகியோரின் படங்கள் சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸாகின்றன. இதனால் விஜய் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version