Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Manaiyadi Sasthiram : வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?

Manaiyadi Sasthiram Vastu Sasthiram in Tamil

Manaiyadi Sasthiram Vastu Sasthiram in Tamil

Manaiyadi Sasthiram : வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம்

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. நீங்கள் அனைவரும் அதன் முக்கியத்துவத்தையும்,ஆளுமையை பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட இவைகள் நம் கட்டிய அல்லது கட்ட போகும் வீட்டினிலுள்ளேயும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒவ்வொருவருக்கும் தாங்கள் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. குறிப்பாக நாம் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.

மனையடி சாஸ்திரம் 2024 – Manaiyadi Sasthiram in Tamil

இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்திற்கும் நிறைய சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். மேலும் வாஸ்து மற்று ஜோதிட வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ்களை பயன்படுத்தினால், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இனிமையாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் – Vasthu Sasthiram 2024

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் உண்டு.குறிப்பாக வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை ஒவ்வொருவரும் சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தினமும் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.

அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

வாஸ்து – பொதுவான குறிப்புகள் 

Manaiyadi shastra vastu in Tamil
Manaiyadi shastra vastu in Tamil

கிழக்கு – குடிநீர் ஆதாரம்
தென் கிழக்கு .. சமையலறை
தெற்கு … இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
வடக்கு … குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியாக அமைக்கவும்.
வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்யுள்ளது. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்.

மேலும் படிக்க : Manaiyadi Sasthiram 2024 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024

மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி - Manaiyadi Sasthiram in Tamil
மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி – Manaiyadi Sasthiram in Tamil

மனையடி சாஸ்திரம் 2024 பலன் :

6 அடி பலன் – நன்மை ஏற்படும்
7 அடி பலன் – தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 அடி பலன் – வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.
9 அடி பலன் – துன்பம் துயரம்
10 அடி. பலன் – பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.
11 அடி பலன் – எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.
12 அடி பலன் – துயரம் புத்திரசோகம்
13 அடி பலன் – துன்பம் நோயினால் அவதி
14 அடி பலன் – பொருள் இழப்பு, கவலை
15 அடி பலன் – துன்பம் துயரம்
16 அடி பலன் – சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
17 அடி பலன் – தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.
18 அடி பலன் – கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 அடி பலன் – புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 அடி பலன் – பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
21 அடி பலன் – வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.
22 அடி பலன் – மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.
23 அடி பலன் – கெடுதி ஏற்படும்
24 அடி பலன் – வரவும் செலவும் சமம்
25 அடி பலன் – மனைவிக்கு கண்டம்
26 அடி பலன் – உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி பலன் – பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.
28 அடி பலன் – கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி பலன் – பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி பலன் – புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.
31 அடி பலன் – நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.
32 அடி பலன் – செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 அடி பலன் – வாழ்க்கையின் நிலை உயரும்
34 அடி பலன் – இடமாற்றம் ஏற்படும்
35 அடி பலன் – திருமகள் அருள்
36 அடி பலன் – சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 அடி பலன் – செய்தொழில் முன்னேற்றம்
38 அடி பலன் – வறுமை, துன்பம்
39 அடி பலன் – நல்ல வாழ்வு
40 அடி பலன் – விரோதிகள் வலிமை பெறுவர்
41 அடி பலன் – செல்வம் பெருகும்
42 அடி பலன் – அஷ்டலட்சுமி வாசம்
43 அடி பலன் – நன்மை ஏற்படாது
44 அடி பலன் – பெரிய இழப்பு உண்டாகும்
45 அடி பலன் – மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 அடி பலன் – வறுமை, நோய்
47 அடி பலன் – பொருள் இழப்பு
48 அடி பலன் – தீயினால் ஆபத்து
49 அடி பலன் – தவறுகள், இழப்புகள்
50 அடி பலன் – நன்மை உண்டாகாது
51 அடி பலன் – வீண் தொல்லைகள்
52 அடி பலன் – பொருள் அபிவிருத்தி
53 அடி பலன் – பெண்களால் பொருள் நட்டம்
54 அடி பலன் – அரசின் சீற்றம்
55 அடி பலன் – உறவினர் விரோதம்
56 அடி பலன் – குடும்ப விருத்தி
57 அடி பலன் – சந்ததி நாசம்
58 அடி பலன் – கண்டம் ஏற்படும்
59 அடி பலன் – கவலைகள் வறுமை
60 அடி பலன் – செய்தொழில் அபிவிருத்தி

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.

மனையடி சாஸ்திரம் அளவுகள் - Manaiyadi Sasthiram in Tamil
மனையடி சாஸ்திரம் அளவுகள் – Manaiyadi Sasthiram in Tamil

வீட்டின் அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும்?

அலுவலக அறை வடமேற்கு திசை
புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை
சேமிப்பு அறை வடக்கு திசை.
கழிவறை வட மேற்கு திசை.

Exit mobile version