Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விசிக-தவெக கூட்டணி !! உண்மையை உடைத்து பேசிய  எம்.எல்.ஏ ஷா நவாஸ்!!

VCK MLA Shah Nawaz has said

VCK MLA Shah Nawaz has said

vck-tvk :அதிமுக மற்றும் தவெக கட்சிகள் விசிகவை கூட்டணிக்கு அழைப்பதாக தெரிவித்து இருக்கிறார் விசிக எம்.எல்.ஏ ஷா நவாஸ்.

ஆளும் திமுக கட்சி கூட்டணியில் பல வாய்ந்த கட்சியாக இருக்கிறது விசிக. திமுக கட்சி தேர்தலில் தொடர் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பது விசிக இதை யாராலும் மறுக்க முடியாது. விசிக இன்று தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா,கேரளா,ஆந்திரா என தனது கட்சியை விரிவாக்கம் செய்து இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியது.

அத் தேர்தலில் தோல்வியை சந்தித்தால் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் தனது கட்சியை தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் விசிகவை உற்று நோக்கி வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் விசிக சார்பில் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்டார்  விசிக எம்.எல்.ஏ ஷா நவாஸ்.

மேலும்  செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக தலைமை விசிக தலைவர் திருமாவளவன் எடுக்கும் கூட்டணி நிலைபாட்டை எதிர் பார்த்து இருக்கிறார்கள் என்றும் தவெக தலைவர்  விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசி இருப்பதுவிடுதலை சிறுத்தை கட்சியை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் இருக்கிறது என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் ஆண்ட கட்சி,ஆளும் கட்சி,புதிதாக வந்த கட்சி,வரப்போகும் கட்சி என அனைத்து கட்சிகளும் விசிக தன்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Exit mobile version