விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோகன்ராஜ்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத எதிர்கட்சிகள்! கொந்தளிப்பில் தமிழக மக்கள்.
பொள்ளாச்சியை மிஞ்சிய சேலம் விடுதலை சிறுத்தைகளின் ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜ். 40 பெண்களை மிரட்டி வீடியோவாக பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு மேலும் தனது நண்பர்களுக்கு இரையாக்கிய கொடுமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் வரும் பெண்களை நயவஞ்சகமாக முறையில் பேச்சு கொடுத்து தனது காம இச்சைக்கு பயன்படுத்திய கொடூரம் மன்னிக்க முடியாத செயலாகும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண்களை மயக்கி அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செயலில் ஈடுபட்டது கொடூரத்தின் மிக உச்சம்.
இத்தகைய செயல்களை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிக்காதது மிகவும் அநியாயம்.
விடுதலைச்சிறுத்தைகளின் கட்சியின் பெயரை வைத்து அதன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தான் பாலியல் பலாத்காரத்தில் தைரியமாக ஈடுபட்டு மோகன்ராஜ் வந்துள்ளார் என்பது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பதிலையே பாதிக்கப்பட்ட பெண்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதே கொடூர செயல்களுக்கு துணையாக இருப்பதாக கண்டன அறிக்கை எதுவும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து வரவில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பதனாலயா இல்லை ஆளுங்கட்சிக்கு இதில் தொடர்பில்லை என்பதால் மு.க ஸ்டாலின், வைகோ போன்ற தமிழக தலைவர்கள் அமைதி காக்கின்றனரா என்பது தெரியவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் மிகக் கடுமையான வார்த்தைகளால் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களை விமர்சித்து வந்தார். இதற்கு ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. “சரக்கு மிடுக்கு எங்க கிட்ட தான் இருக்கு அதனால் தான் உங்கள் வீட்டுப் பெண்களை எங்களை தேடி வருகிறார்கள் என்று ஒரு கட்சி தலைவருக்கு உரிய வார்த்தைகள் பேசாமல் ஏதோ தெருக்கோடியில் உள்ள உள்ளவனை பேசி அனைவரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தினார். இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை காவல் துறையினர்.
இத்தகைய தைரியமான பேச்சை கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை ஆனால் புரிந்து கொள்பவர்களுக்கு புரியும்.
40 பெண்களை சீரழித்த மோகன் ராஜ் அவர்களுக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொண்டு ஆளுங்கட்சியை மிரட்டும் தோணியில் செயல்பட்டுவரும் மு.க. ஸ்டாலின் போன்ற எதிர் கட்சி தலைவர்கள் ஏன் இந்த விஷயத்தில் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்பதனால் அவர் செய்த கொடுமைகளுக்கு எதிராக அறிக்கை விடாதது அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை இழந்து விட்டார் என்ற தோற்றம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.