திருமணத்திற்கு வற்புறுத்தி மாணவி மீது தாக்குதல்! தொடரும் விசிக கட்சியினரின் நாடக காதல் அட்டூழியம்

0
146
VCK Party Members Attacked Girl Student Family due to Drama Love-News4 Tamil Online Tamil News

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வேண்டும் என்று போராடி வரும் நிலையில் சாதி மறுப்பு பேசுபவர்கள் காதல் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்களை துன்புறுத்துவது தமிழகத்தில் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதற்கு உதாரணமாக விழுப்புரம் நவீனா மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி உள்ளிட்ட சம்பவங்களை கூறலாம்.

இதையெல்லாம் சமூகத்திற்கு எடுத்துணர்த்தும் வகையில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் முயற்சியில் திரௌபதி என்ற திரைப்படம் சமீபத்தில் வெள்ளித்திரையில் வெளியாகி பெரும்பாலான தமிழக மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மக்களிடம் வரவேற்பை பெற்ற அளவிற்கு சாதி மறுப்பு அமைப்பினரிடம் எதிர்ப்பையும் பெற்றது.

இந்த திரைப்படம் சுட்டிகாட்டிய நாடக காதல் குறித்த விவாதங்கள் எழுந்த போதெல்லாம் படத்தில் ஏதோவொரு அரசியல் கட்சியை குறிப்பிட்டு கதையை அமைத்துள்ளதாக கடுமையான விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனத்தை உண்மையாக்கும் வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை அடுத்த கஸ்பாவை சேர்ந்தவரான வினோத்ராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். 36 வயதாகும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் இவருடைய ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்குதல் நடத்தியதாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதாவது இவரது ஆட்டோவில் 17 வயதாகும் பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவியை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்பதையும் மறந்து பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த மாணவியோ அதை மறுத்துள்ளார்.

இதனையடுத்து கோவில்பத்து பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்,வினோத்ராஜ் உள்ளிட்டோர் மாணவியின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்க மாணவியை அனுப்புமாறு கூறி தகராறு செய்துள்ளனர்.

அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் அந்த மாணவி மற்றும் அவருடைய தந்தையை கடுமையாக இவர்கள் தாக்கியுள்ளனர். இதைக்கண்டு மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வீட்டிற்கு பின்புறமுள்ள மரத்தில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். இதை பார்த்த அருகிலுள்ளவர்கள அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தகராறில் காயமடைந்த அவரது தந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் காட்டுமன்னார்கோயில் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து நாடக காதல் மூலமாக மாணவியை தாக்கிய குற்றவாளிகளான வினோத்ராஜ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்