Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், NRC, NPR ஆகியவற்றை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் பேரணி நடத்தினர். இதில் விசிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்; எழுபது வயதுவரை அரசியல் பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 வருடங்களாக மக்களுக்கு அரசியல் சேவை செய்த விசிக கட்சி ஏன் ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று காட்டமாக பேசினார். நாங்கள் கூலிக்கு மாரடிக்கும் கும்பல் இல்லை, வெற்று கோஷம் போடும் கும்பலாக விசிக கட்சி இருக்கும் என்று கனவு காண வேண்டாம் என்று கூறினார். மேலும் நாங்களும் ஆட்சியை பிடித்து ஒரு நாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில்;
குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என தெரிவித்தார். மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜகவை அரசியல் கட்சியே இல்லை என்றும், அக்கட்சி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

70 வயது வரை பதவிக்காக காத்திருப்பவர் என்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக பேசினாரா? அல்லது பாமக ஆட்சியை பிடிப்பது உறுதி என்று கூறிய ராமதாஸ் மற்றும் அன்புமணியை குறிப்பிட்டு பேசினாரா? என்று தெரியவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வருவோம் என்கிற பேச்சினால் திமுக விசிக கூட்டணியில் நாளை விரிசல் வருமோ..? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று கோட்டையில் கொடியேற்றுவோம் என்று கூறிய விசிகவை, அன்று கலைஞர் கருணாநிதி உங்களுக்கெல்லாம் பொது தொகுதி தரமுடியாது என்று மறுத்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version