Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நவகிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், உள்ளிட்ட மூன்றிலும் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சோழ நாட்டு காவிரி தென்கரை தனங்களில் 125வது தலமாக இருக்கிறது.

மற்ற கோவில்களில் இருப்பதைப் போல இல்லாமல் இங்கே எல்லா கோள்களும் நேர் பக்க வரிசையில் இறைவனின் திருமண கோலத்தை தரிசிப்பதை போல அமைந்திருக்கின்றன. அதன் காரணமாக, இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவகிரகங்களால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

ராமபிரான் இலங்கையில் ராவணனை வதம் செய்த பின்னர் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இதன் காரணமாக, ராமர் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்த போது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தன்னுடைய வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் தெரிவிக்கிறது.

ஆகவே இந்த விநாயகருக்கு ராம வீரகத்தி விநாயகர் என்ற பெயர் உண்டானது, வலது காலை தூக்கிய படி நர்த்தன விநாயகரை போல இந்த விநாயகர் காட்சி தருவது மிகவும் சிறப்பு.

சென்னையிலிருந்து வேதாரண்யத்திற்கு வருகை தர விரும்பும் பக்தர்கள் கடலூர் சிதம்பரம் வழியாக நாகப்பட்டினத்திற்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யத்திற்கு சென்று வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலை தரிசிக்கலாம்.

மதுரை, ராமநாதபுரம், போன்ற பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து வேதாரண்யத்தை அடைந்து விடலாம் திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பக்தர்கள் மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டி வந்து வேதாரண்யத்தை அடைந்து வேதாரண்யேஸ்வரரை தரிசிக்கலாம்.

Exit mobile version