சந்தனகடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் மரணம்!

0
183
#image_title

சந்தனகடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் முக்கியமான ஒருவர் தான் மீசை மாதையன்.மீசை மாதையனின் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சந்தன மரங்களை வெட்டுதல், கடத்துதல் போன்ற செயல்களை செய்தபோது. வீரப்பனுக்கு உதவியாக இருந்தவர் தான் மீசை மாதையன்.

பின் போலிஸுக்கு பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாகி உள்ளனர், அதில் சாமிநாதன் என்பவர், 1991 ம் ஆண்டு DCF ஸ்ரீநிவாஸிடம் பிடிபட்டார், மேலும் 1993 ல் முனியன் மற்றும் சுண்டா, எனும் இருவரையும் போலீஸார் பிடித்து  சிறையில் அடைத்துள்ளனர்.

பின் மூவரும் சிறையில் இருந்த தப்பித்த பொழுது, காவல் துறையினரால் சுட்டுக் கொல்லபட்டனர்.

1998 ல் வீரப்பனின் குழுவை சேர்ந்த மாதேஷை, சத்தியமங்கலம் காட்டில், தமிழ்நாடு இன்ஸ்பெக்டர் மோகன் நவாஷ் சுட்டுகொன்றார்.

இதில், வீரப்பன் குழுவில் இருந்த மீசை மாதையன் மட்டும், கர்நாடக போலீஸில் பிடிபட்டார். அவர் மீது சந்தன மரங்களை  வெட்டுதல், போன்ற வழக்குகளை  பதிவு செய்து மைசூர் சிறையில் அடைத்துள்ளனர்.

பிடிப்பட்ட அனைவருக்கும் உச்சநீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது, இதை எதிர்த்து ஜனாதிபதிக்கு கருணை மனுவும் அனுப்பப்பட்டது.

அதை முன்னால் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி தள்ளுபடி செய்தார். பிடிபட்ட நான்கு பேரையும் தூக்கிலிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

பின் சில சமூக ஆர்வலர்கள், உச்சநீதி மன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினர்.

மீசை மாதையன், கடந்த 11 ம் தேதி காலை உடல் நலக்குறைவால் மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்துள்ளார். வீரப்பனின் கூட்டாளியில் இவரே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.