வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
77
#image_title

வெஜிடபிள் சூப் இப்படி செய்தால் ஹோட்டல் சுவையில் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

அனைவருக்கும் சூப் ரெசிபி பிடித்த ஒன்றாக இருக்கிறது.இது மிகவும் சுவையாக இருப்பதோடு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கேரட் – 2

*பீன்ஸ் – 10

*கார்ன் – 1 கப்

*முட்டைகோஸ் – 1/4 கப்

*பெரிய வெங்காயம் – 1/4 கப்

*சோள மாவு – 1 தேக்கரண்டி

*பூண்டு – 2 பற்கள்

*மிளகுதூள் – 1 1/2 தேக்கரண்டி

*ஸ்பிரிங் ஆனியன் – சிறிதளவு

*சோயாசாஸ் – 1 தேக்கரண்டி

*உப்பு  – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் சூப் செய்ய கேரட்,பீன்ஸ்,கார்ன்,பெரிய வெங்காயம்,முட்டைகோஸ் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சோளத்தை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு சூப் செய்ய நறுக்கி வைத்துள்ள கேரட்,பீன்ஸ்,சோளம் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

அதன் பின்னர் அரைத்து சோள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு அதில் 5 கப் அளவு தண்ணீர் ஊற்றவும்.அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து சூப் பாத்திரத்தை ஒரு மூடி போட்டு 20 நிமிடம் வரை வேக விடவும்.

பிறகு ஒரு பவுலில் சோள மாவு சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்கின்ற சூப்பில் கலக்கவும்.இதை 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.பின்னர் அதில் 1 1/2 தேக்கரண்டி மிளகுதூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.அடுத்து ஸ்பிரிங் ஆனியன் தூவி நன்கு கலக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்.