மாலையில் உண்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி சூப்.! பல்வேறு ருசிகர தகவல்கள்.!!

0
181

மாலையில் உண்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி சூப்.! பல்வேறு ருசிகர தகவல்கள்.!!

உடல் நலிவுறும் போது குடித்தால் நல்ல ஊட்டம் தரும். உடல்நலம் குன்றியபோது செரிமானத்தைச் சீராக்கி, உடலுக்கு வலுவூட்டி, நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி உடல் நலத்தை மீட்க காய்கறி சூப் (சாறம்) உதவுகிறது.

கடைகளில் சூப் என்கிற பெயரில் விற்கப்படும் கொழ கொழப்பான பொருட்கள் நல்லதான சூப் அல்ல. அவற்றை குடித்தால் உடல் மந்தமும், நாக்கில் சுவை உணரா தன்மையும் அதிகம் ஏற்பட்டுவிடும்.

சூப்’பில் சேர்க்க கூடாத பொருட்கள்: எண்ணெய், சோளச்சீவல் (கார்ன் சிப்சு) மிகை உப்பு, மிளகாய் காரம், வெண்ணெய், சுவை தரக்கூடிய பொருட்களை சூப்பில் சேர்க்க கூடாது. தவறுதலாக சேர்த்துவிட்டால் சுவை மற்றும் பலன் இருக்காது.

“காய்கறிசூப்’ தயாரிக்க தேவையான உணவுப் பொருட்களும் செய்முறையும்:
முருங்கை, வெண்டைக்காய், சுண்டைக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய் ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு காய்கறி அல்லது 2 க்கும் மேற்பட்ட காய்கறியையும் 100 கி / 200 கி எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன்,

சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5 பல்
சீரகத்தூள் – ஒரு சிறுகரண்டி அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு, கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கு ஒரு தக்காளியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை :
காய்களை நன்கு பொடியாக நறுக்கி சமைப்பானில் அரிசி களைந்த நீருடன் (தேவையான அளவு பச்சைநீரையும் பயன் படுத்தலாம்) இட்டு வெங்காயம், பல் உரித்த பூண்டு, சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து வேக வைக்க வேண்டும்.

பின்னர் இதனை வடிகட்டியோ, காயுடனோ குவளைகளில் ஊற்றி தேவையான அளவு மிளகுத் தூள், உப்பு போட்டுகலக்கி இதமான இளஞ்சூட்டில் சுவைத்துக் குடியுங்கள். இதனுடன் சாதம் கலந்து கூட குழந்தைகளுக்கு தரலாம்.

குறிப்பு: சூப்’களை மீண்டும் சூடேற்ற கூடாது.