மதுரையில் கொரோனா பரவலை தடுக்க 342 தனியார் வாகனங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
கிராமப்புறங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. மதுரையில் மட்டும் 13 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 420 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மக்கள் நகர்புறங்களுக்கு சென்று வருகின்றனர். தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கிராமப்புறங்களுக்கு சென்று சப்ளை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி 342 தனியார் வாகனங்களுக்கு ஒப்புதல் அளித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செல்லதுரை அவர்கள் தலைமையில் அதிகாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்ய அனுமதித்தனர்.
அனைத்து கிராமப்புறங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கிருமி நாசினி தெளித்து மற்றும் முக கவசம் வழங்குதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சற்று அதிகமாக ஏற்பட்டுள்ள கிராமப்புறங்களில் தனிமை படுத்தி அவர்களுக்கான அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.