“சைவ முட்டை” வறுவல் இப்படி செய்தால் செம்ம ருசியாக இருக்கும்!! இன்றே முயற்சி செய்யுங்கள்!

0
131
#image_title

“சைவ முட்டை” வறுவல் இப்படி செய்தால் செம்ம ருசியாக இருக்கும்!! இன்றே முயற்சி செய்யுங்கள்!

நம் அனைவருக்கு பிடித்த உணவு பொருட்களில் ஒன்று முட்டை.ஆனால் தற்பொழுது முட்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வதால் அதனை வாங்கி பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.இந்நிலையில் குறைந்த செலவில் கடலை மாவை வைத்து “சைவ முட்டை” வறுவல் செய்யலாம்.இதன் ருசி ஒரிஜினல் முட்டை வறுவலை தோற்கடித்து விடும்.

தேவையான பொருட்கள்:-

எண்ணெய் – 7 தேக்கரண்டி

கடுகு – 1/4 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது

கருவேப்பிலை – 1கொத்து

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி இலை – சிறிதளவு

தக்காளி – 1 (சிறியது)

தூள் உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

கடலை மாவு – 1 கப்

சோடா உப்பு – 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.ஒரு பவுல் எடுத்து அதில் கடலைமாவு எடுத்து அதில் சோடா உப்பு மற்றும் உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராமல் கலக்கி கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் கலந்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து முட்டை வறுப்பது போல் வறுக்க வேண்டும்.

3.பின்னர் அதே அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் 4 தேக்கரண்டி சேர்க்க வேண்டும்.பின்னர் எண்ணெய் சூடேறியதும் 1/4 தேக்கரண்டி அளவு கடுகு சேர்க்க வேண்டும்.

4.பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கருவேப்பிலை,நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

5.நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

6.பின்னர் மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.பின்னர் வதக்கி வைத்துள்ள கடலை மாவு கலவையை இதில் சேர்த்து தொடர்ந்து கலந்து விடவும்.

7.பச்சை வாசனை நீங்கிய பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.