Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!

vehicles-going-without-paying-at-the-toll-booth-income-loss-of-several-lakhs-of-rupees

vehicles-going-without-paying-at-the-toll-booth-income-loss-of-several-lakhs-of-rupees

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!

தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக தற்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கசாவடியில் 26 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் அவர்களின் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டது என கூறி பணிநீக்கம் செய்துள்ளனர்.

அதனால் அந்த ஊழியர்கள் அனைவரும் தங்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு ஆதரவாக சக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.அரசு சார்பில் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது ஆனால் எந்த ஒரு தீர்வும் கிடைக்க வில்லை.அதனால் இன்று மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.மேலும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுங்கசாவடி அலுவலகத்தின்  எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று வாகனங்கள் பணம் செலுத்தாமல் சென்று வருவதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version