Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Vellathurai suspension issue.. Pressure put by Stalin!! The next step will be taken against the Home Secretary!!

Vellathurai suspension issue.. Pressure put by Stalin!! The next step will be taken against the Home Secretary!!

வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம்.. ஸ்டாலின் போட்ட பிரஷர்!! உள்துறை செயலாளர் மீது எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வரும் வெள்ளத்துரை அவர்களை பணியிடை நீக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அதன் உத்தரவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வெள்ளதுரை அவர்கள் மிகப்பெரிய என்கவுண்டர்-களில் இவரது பெயரானது தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக வீரப்பனை சுட்டுக் கொன்றது என தொடங்கி மருதுபாண்டியர் குரு பூஜையில் எஸ் ஐ-யை  கொலை செய்த ரவுடிகளை என்கவுண்டர் செய்தது வரை இவரது குழு தான் இதில் முதன்மை வாய்ந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட இவரை தங்களது வேலைக்காக சிறப்புப்படை கண்காணிப்பாளராக சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பல தகவல்கள் வெளியானது.அதேபோல இவரை வைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த ரவுடிகளை முடக்கியதாகவும் கூறினர்.

இதனிடையே இன்று வெள்ளத்துரை அவர்களுக்கு பணி நிறைவு நாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் நேற்று அதனை புரட்டிப் போடும் விதத்தில் சஸ்பெண்ட் ஆடரை உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரத்திலேயே அதன் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.இந்த உத்தரவு குறித்து முதலமைச்சருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதற்கு மாறாக செயல்பட்டதால் அமுதாவிற்கு எச்சரிக்கை கொடுத்து அந்த உத்தரவை ரத்து செய்யும்படி முதலமைச்சர் இடத்திலிருந்து அழுத்தம் வந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த சஸ்பென் ஆர்டரானது 2013ஆம் ஆண்டு, விசாரணைக்காக ரவுடி கொக்கி குமார் என்றவரை அழைத்து வரப்பட்டு பின்பு லாக்கப் மரணம் அடைந்துள்ளார்.இது குறித்து வெள்ளத்துரை மீது சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தது.தற்பொழுது வரை இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இவாறு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது பணி ஓய்வு பெற இயலாது.மேற்கொண்டு இந்த லாக்கப் மரணம் குறித்து என் மீது தவறில்லை எனக் கூறி வெள்ளத்துரை அறிக்கை தாக்கல் செய்ததாக கூறுகின்றனர்.

ஆனால் வழக்கு நிலுவையில் உள்ள பொழுது அவருக்கு ஓய்வு அனுமதி கொடுத்தால் உள்துறை செயலாளர் மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவானது ரத்து செய்யப்பட்டது.அதில் குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு வழங்கப்படும் பணத்தில் 5 லட்சம் பிடித்தம் செய்யப்படும் என்று உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.

Exit mobile version