வெள்ளி மோதிரம் அணிந்துள்ளீர்களா? அதிர்ஷ்டம் கிடைக்க இந்த விரலில் அணிந்துக்கொள்ளுங்கள்..!

0
402

Velli Mothiram Payangal: மக்கள் பொதுவாக முதலீடு செய்வதென்றால் முதலில் தேர்ந்தெடுக்கும் பொருள் தங்கம் தான். ஏனென்றால் தங்கத்தின் விலை இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது. சொல்லப்போனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாெட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தங்கத்தின் விலை அவ்வளவு விலை விற்கிறது. பெண்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது தனி பிரியம் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வெள்ளியால் ஆன கொலுசு, மெட்டி, காப்பு போன்றவற்றை விரும்பி வாங்கி அணிந்துக்கொள்வார்கள்.

தங்கத்தை விட வெள்ளி சற்று குறைவான விலை என்றாலும், நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து வெள்ளியால் ஆன ஆபரணங்கள் தான் பெண்கள் காெலுசாகவும், மெட்டியாகவும் அணிந்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் வெள்ளி உடலுக்கு குளிர்ச்சி என்பதால் வெள்ளி பொருட்களை பயன்படுத்துவது அவ்வளவு சிறந்தது. அதனால் தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வெள்ளி தட்டு, டம்ளர், போன்றவற்றில் உணவு கொடுப்பார்கள்.

அந்த வகையில் நாம் வாங்கும் தங்கத்தை எப்படி நல்ல நாள், அட்சய திருதியை நாட்களில் வாங்கி அணிந்துக்கொள்கிறோமோ, அதுபோன்ற சுக்கிரனுக்கு உகந்த இந்த வெள்ளியால் ஆன மோதிரத்தை ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட விரலில் அணிந்துக்காெள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி (silver ring benefits in tamil) அணிந்துக்கொண்டால் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

வெள்ளி மோதிரம் அணியும் முறைகள்

பொதுவாக சுக்கிரனின் அம்சமாக கருதப்படும் இந்த வெள்ளி மோதிரத்தை நாம் வலது கை சுண்டு விரலில் போட்டுக்கொண்டால், சுண்டுவிரலின் கிரகமாக பார்க்கப்படுவது புதன் கிரகம். சுக்கிரனும், புதனும் நட்பு கிரகமாக இருப்பதால் நீங்கள் வெள்ளி மோதிரத்தை வலது கை சுண்டு விரலில் அணிந்தால் நீங்கள் வேண்டியது (velli mothiram entha viralil aniyalam) நடக்கும்.

மேலும் மோதிரத்தை நீங்கள் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வாங்கி வந்து அதனை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அப்போது வெள்ளியின் ஆற்றல் நமக்கு பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி போட்டு வைத்த மோதிரத்தை எடுத்து நீங்கள் உங்கள் வலது கையின் சுண்டு விரலில் அணிந்துக்கொள்ளலாம். வலது மூளை எப்போதும் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கும்  என்பதால் நீங்கள் வலது கை சுண்டு விரலில் அணிவது சிறப்பு.

அவ்வாறு அணிய விருப்பம் இல்லாதவர்கள் மோதிரத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாம். ஆண், பெண் இருவரும் அணிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: உங்கள் வீட்டில் மயில் தோகை வைத்துள்ளீர்களா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!