தமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

0
126

தமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதேபோல் தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர். அதேபோல் கனமழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும் இன்னும் சில இடங்களில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து தகவல் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் சாலைகளில் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.