உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?        

0
280
vendhaya soup

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெந்தய சூப் செய்வது எப்படி?

வெந்தயம் உடல் உஸ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.இரும்பல்,தாகம்,குடல் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும்.அன்றாடம் உணவோடு வெந்தயத்தையும் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுகொப்புடனும் இருக்கும்.

வெந்தய சூப்    

தேவையான பொருட்கள்:   

புளி.

உப்பு – 2 தேக்கரண்டி.

வெந்தயம்- 1/4 தேக்கரண்டி.

துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி.

மிளகாய் வற்றல் – 8.

மிளகு – 10.

நெய்- 1 தேக்கரண்டி.

தேங்காய்.

கறிவேப்பிலை.

கொத்தமல்லித்தழை.

தேங்காய் துருவல்.

கடுகு.

வெங்காயம்.

செய்முறை:   

அறை லிட்டர் நீரில், புளியைப் போட்டு கரைத்து அறை மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.பிறகு இதில் உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

வெந்தயம், துவரம் பருப்பு, மிளகாய் வற்றல் 6 மிளகு ஆகியவற்றை நாலெண்ணை விட்டு வறுத்துக் கொண்டு பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து அம்மியில் வைத்து வெண்ணெய் போல அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை சிறிதளவு நீரில் கரைத்து கொதித்து கொண்டிருக்கும் போது புளி நீரில் கொட்டி நன்றாக கலக்கி விடவும்.கறிவேப்பிலையை தனலில் வாட்டி சூப்பில் போடவும். பத்து கொத்தமல்லித்தழையைக்  கிள்ளிப் போடவும். ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும் , மிளகாய் வற்றல் 2, கடுகு போட்டுத் தாளித்து சூப்பில்  கொட்டவும். சிறிதளவு பெருங்காயத்தை நீரில் கரைத்து தெளிவை மட்டும் கொட்டி இறக்கி சூடாக பரிமாறவும்.